குருமகா சன்னிதானம் டாக்டர் ஸ்ரீலஸ்ரீ சுவாமி தமிழ்ப்பித்த ஆதீனம் அவர்கள் நிகழ்கால ஞானி ஆவார். நாகர்கோவில்- சுசீந்திரம் , மருங்கூர் ஊரில் 31. 12. 1948 ல் பிறந்தவர். இளமையிலேயே துறவு வாழ்க்கை மேற்கொண்டவர். உலகத்திலேயே அதிகமான, உயரிய பட்டங்களைப் பெற்ற சிறப்புக்குரியவர். தமிழகத்தில் உள்ள பெரும்பாலான கோயில்களிலும், அந்தமான், இந்தியா மற்றும் மலேசியா, சிங்கப்பூர், தாய்லாந்து ஆகிய உலக நாடுகளில் அறிவு சார்ந்த ஆன்மீக சொற்பொழிவு நிகழ்த்தியுள்ளார். மக்களுக்கு விழிப்புணர்வையும், வாழ்க்கையை சந்தோசமாக அமைத்துக் கொள்ளும் வழிமுறைகளையும் , வாழ்ந்து பாருங்கள் என்ற நூலையும் மற்றும் ஆயிரக்கணக்கான சிறு கையேடுகளையும் வெளியிட்டுள்ளார். மற்றும் வார, மாத இதழ்களிலும் இவர்களுடைய கட்டுரைகள் வெளிவந்துள்ளது. சுவாமி தமிழ்ப்பித்த ஆதீனம் அறக்கட்டளைகள் கொளஞ்சிவாடி தாராபுரம், செல்லம்பாளையம், ஈரோடு. கப்பலூர், மதுரை
நீலாங்கரை, சென்னை ஆகிய இடங்களில் செயல்பட்டு வருகிறது.
சுவாமி தன்னைப் பற்றி..
கடவுளுக்கு உருவமில்லை. ஞானியே கடவுள் நிலை பெறுகின்றார். இயேசு, புத்தர், நபி, கண்ணன், ராமகிருஷ்ணர், வள்ளலார் முதலானோர் ஞானிகளே. இவ்வரிசையில் தானும் ( நானும் )ஒரு ஞானியே.
எல்லா ஞானிகளையும் சமகால மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். அதைப்போலவே என் கருத்துக்களையும் மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்பதைப் புரிந்தே எழுதுகிறேன்.
மற்ற ஞானிகளைப் போலவே என் கருத்துகளுக்கும் பின்னால் மதிப்பு ஏற்படும்.
யாரை வணங்கியும், யாரும் அமைதி பெற முடியாது. அவனவன் அறிவு வழி செயல்பட்டே அமைதி காண முடியும் .
குரு அவ்வழியை காட்டுவார். நடந்து முடிக்க வேண்டியது அவரவர் கடமையாகும்.
நான் ஒரு குரு. பரிணாம வளர்ச்சியில் எல்லோரும் குரு ஆக முடியும்.
சுவாமி தமிழ்ப்பித்த ஆதீனம் அவர்கள் 19.05. 2017 அன்று கப்பலூர்- திருமங்கலம், மதுரையில் முக்திநிலை அடைந்தார்.